February 24, 2026

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடக்கம்: 9-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் கர்நாடகா

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடக்கம்: 9-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் கர்நாடகா

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் கர்​நாடகா – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இன்று மோதுகின்​றன. 5 நாட்​கள் கொண்ட இந்த ஆட்​டம் கர்நாடகா​வின் ஹூப்​ளி​யில் உள்ள கேஎஸ்​சிஏ மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது.

பராஸ் டோக்ரா தலை​மையி​லான ஜம்மு & காஷ்மீர் அணி முதன்​முறை​யாக இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அதேவேளை​யில் கர்​நாடகா அணி 9-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வெல்​லும் முனைப்​பில் களமிறங்​கு​கிறது. அந்த அணி​யின் பேட்​டிங்​கில் கே.எல்​.​ராகுல், கருண் நாயர், கேப்​டன் தேவ்​தத் படிக்​கல், ரவிச்​சந்​திரன் சமரன் ஆகியோர் வலுசேர்க்​கக்​கூடிய​வர்​கள்.

கே.எல்​.​ராகுல் 3 ஆட்​டங்​களில் 457 ரன்​களை​யும், கருண் நாயர் 8 ஆட்​டங்​களில் 699 ரன்​களை​யும், தேவ்​தத் படிக்​கல் 5 ஆட்​டங்​களில் 532 ரன்​களை​யும், ரவிச்​சந்​திரன் சமரன் 8 ஆட்​டங்​களில் 950 ரன்​களை​யும் குவித்​துள்​ளனர். இவர்​கள், ஜம்மு & காஷ்மீர் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​களுக்கு கடும் சவால்​தரக்​கூடும்.

எனினும் இந்த வலு​வான பேட்​டிங் வரிசைக்கு வேகப்​பந்து வீச்​சாளர் அகிப் நபி தலை​மையி​லான ஜம்மு & காஷ்மீர் பந்​து​வீச்​சுத்​துறை பதிலடி கொடுக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஏனெனில் அந்த அணி அரை இறு​தி​யில் பலம் வாய்ந்த பெங்​கால் அணியை வீழ்த்​தி​யிருந்​தது. அகிப் நபி நடப்பு சீசனில் 55 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார்.

கர்​நாடக அணி​யின் பந்​து​வீச்​சும் பலம் வாய்ந்​த​தாகவே திகழ்​கிறது. பிரசித் கிருஷ்ணா, வித்​வத் கவேரப்​பா, வித்​யாதர் பாட்​டீல், வைஷாக் விஜயகு​மார், ஷிகார் ஷெட், மோஷின் கான், ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் ஜம்மு & காஷ்மீர் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

ஆல்​ர​வுண்​ட​ரான சுழற்​பந்து வீச்​சாளர் ஸ்ரேயஸ் கோபால் நடப்பு தொடரில் 46 விக்​கெட்​களை வீழ்த்தி உள்​ளார். மேலும் பேட்​டிங்​கில் 442 ரன்​களை​யும் சேர்த்​துள்​ளார். இதனால் அவரிடம் இருந்து மீண்​டும் ஒருமுறை மேம்​பட்​ட செயல்திறன்​ வெளிப்​படக்​கூடும்​.

Spread the love