February 11, 2026

ரஷ்யாவில்தான் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

ரஷ்யாவில்தான் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

ஹைதராபாத்: ரஷ்​யா​வில் படிக்​கும் இந்​திய மாணவர்​கள் 4 பேர் மீது சமீபத்​தில் தாக்​குதல் நடந்​தது.

இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளியிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சர்​வ​தேச அளவில் உள்ள 196 நாடு​களில் பெரும்​பாலான நாடு​களில் இந்​திய மாணவர்​கள் படிக்​கின்​றனர். அந்த நாடு​களில் சித்​ர​வதை, இன ரீதியி​லான தாக்​குதல் போன்ற சம்​பவங்​கள் தொடர்​பாக கடந்த 2025ம் ஆண்டு 350 புகார்​களை இந்​திய மாணவர்​கள் பதிவு செய்துள்​ளனர். அவற்​றில் 200-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் ரஷ்யாவில் ​தான் பதி​வாகி உள்​ளன.

இதில் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில்​ தான் அதி​கபட்​ச​மாக இந்திய மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரஷ்​யா​வில் இந்​திய மாணவர்​களுக்கு எதி​ராக தாக்​குதல் தொடர்​பாக கடந்த 2023ம் ஆண்டு 68, 2024ம் ஆண்டு 78, 2025ம் ஆண்டு 201 புகார்​கள் பதிவாகி உள்​ளன. எனினும், கல்​லூரியை விட்டு நீக்​கி​விடு​வார்கள் என்ற அச்​சத்​தில் இந்​திய மாணவர்​கள் பலர் புகார் தெரிவிப்பதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love