ராகுல் காந்தியுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு பற்றி..

ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி
தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சு தொடங்காத நிலையில் சோனியா இல்லத்தில் ராகுல் காந்தியுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்று ஸ்டாலின் கூறிய நிலையில், ராகுலுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியுடனான சந்திப்புக்குப் பிறகு பிரவீன் சக்கரவர்த்தி சென்னைக்குத் திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

More Stories
கர்நாடகாவின் லாட்லி மஷாக் தர்காவில் சிவராத்திரி கொண்டாட தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
வாக்காளர்களுக்கு கொடுக்க திமுக ரூ.2000 கோடி பதுக்கல்; நடவடிக்கை தேவை: தமிழக பாஜக!
“மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” – வந்தே மாதரம் குறித்த உள்துறை முடிவுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்