February 19, 2026

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் சாதாரண நகர்மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி ஆகிய முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி கட்டிடம் குறித்து ஆலோசனை

புதிய நகராட்சி கட்டிடம் அமைப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சில உறுப்பினர்கள் உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்த, மற்றவர்கள் பொதுமக்களின் கருத்தை கேட்டு பின்னர் முடிவு எடுக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பழைய மீன் மார்க்கெட்டுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்காலிக கடைகள் அமைத்து, முன்னர் வியாபாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஒருமனதாக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் வார்டு உறுப்பினர்கள் நசுருதீன் ,சுஹைபு , சப்ராஸ் நவாஸ் , முகமது காசிம் , சேக் உசைன், ஆகியோர் நகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு ஒரே ஒப்பந்ததாரரை மீண்டும் நியமித்ததன் காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே வழங்கப்பட்ட பணிகளில் தாமதமாகவும் குறைபாடுகள் மிகுந்தும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கே ஒப்பந்தம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் அருள் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா நகரமைப்பு ஆய்வாளர் ஸ்ரீராம் கணக்காளர் தமிழ்செல்வன் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love