ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி, ரயில்வே பீட்டர் ரோடு மற்றும் வேர்க்கோடு மார்க்கெட் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வை நகராட்சி சுகாதார அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் குமார் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
ஆய்வின் போது, இரண்டு மொத்த வியாபாரக் கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 0.5 மெட்ரிக் டன் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
24-07-2026
ஈரோடு மாவட்டம்
24-07-2026