October 24, 2026

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்துக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: தமிழ்​நாடு ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை குழு​மத்​தின் (‘டிஎன் ரெரா’) தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள பணீந்​திர ரெட்டி மற்​றும் உறுப்​பினர்​கள் முதல்வர் விஜய்யை சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்.

கட்​டிடம் மனை விற்​பனையை முறைப்​படுத்​துதல் மற்​றும் மேம்​படுத்​துதல் சட்​டம், வாங்​கு​வோர் மற்​றும் விற்​பவர்​களுக்கு இடையி​லான குடி​யிருப்பு மற்​றும் வணிக பரிவர்த்​தனை​களை முறைப்​படுத்​துகிறது.

இந்த சட்​டப்​படி மாநில அளவில் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா), கட்​டிடம், மனை விற்​பனைத் துறை​யினை கண்​காணிக்​க​வும், அதுதொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்​க​வும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில், தமிழ்​நாடு ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறைக் குழு​மம் செயல்​பட்டு வரு​கிறது. கடந்த ஜூலை மாதம் குழு​மத்​தின் தலை​வ​ராக ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி க.பணீந்​திர ரெட்​டியை​யும், உறுப்​பினர்​களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஏ.நசீர் அகமது மற்​றும் ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதி​காரி ரீட்டா ஹரிஷ் தாக்​கர் ஆகியோரை​யும் தமிழக அரசு நியமித்​தது.

தற்​போது இந்த குழு​மத்​தின் நிர்​வாகக் குழு​வில் சில மாற்​றங்​களை தமிழக அரசு செய்து அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, தலை​வ​ராக க.பணீந்​திர ரெட்டி செயல்​படு​வார்.

உறுப்​பினர்​களாக ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி​கள் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், மைதிலி கே.​ராஜேந்​திரன் மற்​றும் ஓய்​வு​பெற்ற மாவட்ட நீதிபதி ஏ.நசீர் அகமது​வுக்கு பதில் ஓய்​வு​பெற்ற மாவட்ட நீதிபதி எஸ்​.கிரு​பாகரன் மதுரம், ஓய்​வு​பெற்ற தலைமை பொறி​யாளர் கே.பி.சத்​தி​யமூர்த்தி ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை ‘டிஎன் ரெரா’ குழு​மத்​தின் தலை​வர் பணீந்​திர ரெட்டி மற்​றும் உறுப்​பினர்​கள் நேற்று சந்​தித்​து வாழ்த்துப் பெற்றனர்.

Spread the love