திமுகவினர் ரூ. 8 ஆயிரம் கூப்பன் மாதிரி வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனிடையில் திருச்சி மண்ணச்சநல்லூரில் இந்த கூப்பன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், திமுக அதன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் மாடலை மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை வழங்கி திமுக வாக்கு சேகரிப்பதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், திருச்சி மண்ணச்சநல்லூரில் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளை தாங்க முடியாமல் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு இது மாதிரியான மக்களை ஏமாற்றும் மோசடிகளை அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.

More Stories
தமிழகத்தில் வீதி எங்கும் விசில் கோலங்கள்! விஜய்யின் ஒற்றை வேண்டுகோளுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்
தைலாபுரத்தில் ஐயாவின் ஜனநாயகக் கடமை! வீட்டிலிருந்தே தபால் வாக்கைப் பதிவு செய்த ராமதாஸ்!
விசில் அடிக்கலாம்… நாட்டை கொடுக்க முடியாது– விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்!