
புதுடெல்லி: பிரிட்டனைச் சேர்ந்தவர் ரோரி போர்ட்டர். இவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிறகு டெல்லி மெட்ரோ ரயிலின் தரத்தைப் பாராட்டி வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரோரி கூறியிருப்பதாவது: “டெல்லி மெட்ரோ ரயிலில் அரை மணி நேரப் பயணத்துக்கு ரூ.43 மட்டுமே (பிரிட்டன் பணத்தில் 0.35 பவுண்ட் மட்டுமே) கட்டணமாக உள்ளது. லண்டன் மெட்ரோவுடன் ஒப்பிடும்போது இது மிக மிக குறைவான கட்டணம். உலகிலேயே நான் பார்த்த மெட்ரோ ரயில்களில் மிகக் குறைவான கட்டணம் டெல்லியில் தான் உள்ளது.
மேலும், மெட்ரோ ரயில்களின் தரம், பாதுகாப்பு அருமையாக உள்ளது. அனைத்து ரயில்களும் மிகவும் அழகாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகின்றன. இதைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். உலகம் முழுவதும் நான் பார்த்த மெட்ரோ ரயில்களில் இதுதான் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைப் பார்த்த சிலர் ரோரி போர்ட்டரின் வீடியோவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒரு பதிவர் கூறும்போது, “நமது மெட்ரோ ரயில் திட்டம், உலக அளவில் பிரபலம் பெற்று வருகிறது. நவீன வசதிகள், சுத்தமான ரயில் நிலையங்கள், வசதிகள் போன்றவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் ஈர்த்து வருகிறது. உங்கள் நண்பர்களையும், குடும்பத்தாரையும் இந்தியாவில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு ஊக்குவியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
ஜூலை 1-ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்வு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு | 8 பேர் மீது வழக்குப்பதிவு!
துங்கபத்ரா அணையின் 33 மதகுகள் திறப்பு: கங்கை – காவிரி இணைப்பு அவசியம் ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்