ஒட்டன்சத்திரம் பிப்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சிக்கு புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பரப்பலாறுஅணை சுற்றுலா மையம் அமைக்க அரசு அனுமதி பெற்று தந்த பசுமை நாயகர், சரித்திரம் படைத்த சாதனை நாயகர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களுக்கு பாராட்டு விழா வடகாடு ஊராட்சி,வடகாட்டில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திமுக மாவட்ட அவைத் தலைவர் தி.மோகன் தலைமை வகிக்தனர்.விழாவில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜாமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் இரா.ஜோதீஸ்வரன், மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே பாலு,ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் திமுக ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார்.விழாவில் ஒட்டன்சத்திரம் நகரக் கழக செயலாளர் ப.வெள்ளைச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் தி.தர்மராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீ.கண்ணன், தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சி தங்கம்,மத்திய ஒன்றிய செயலாளர் கா.பொன்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் நா.சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.செல்வராஜ், நகர் மன்ற தலைவர் க.திருமலைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை கூறினார். இவ்விழாவில் வடகாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா. தனலட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெ.ராமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மு.பிரபா, வடகாடு ஊராட்சி கழக பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய துணை செயலாளர் கே.வி முருகானந்தம் நன்றி கூறினார்.
வடகாடு ஊராட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி -க்கு பாராட்டு விழா.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்