ஆதரவாக இருந்த டிஎஸ்பி மீதும் நடவடிக்கை
சென்னை: வருவாய்த் துறை அதிகாரியிடம் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்ததாக டிஎஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் சென்றது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரான கூடுதல் டிஜிபி அருண் உத்தரவிட்டார். அதன்படி காவல் ஆய்வாளர் விமலா விசாரணை நடத்தினார்.
அவர் புகாருக்குள்ளான வருவாய்த் துறை அதிகாரியிடம் விசாரணை நடத்தினார். ஒரு கட்டத்தில் `உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் தர வேண்டும்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன அந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஐஜி துரைகுமார் தலைமையிலான போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.
இதில் இன்ஸ்பெக்டர் விமலா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருணிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் டிஎஸ்பி ஜாய் தயாள் ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More Stories
தமிழ்நாட்டில் பசுமை ஆற்றல் திட்டங்களை விரைவுபடுத்த 5 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்கள் அமைப்பு!
புஸ்ஸி ஆனந்த் முதல் வன்னியரசு வரை: 34 அமைச்சர்களின் PA லிஸ்ட் ரெடி- மொபைல் நம்பர்களுடன் முழுவிவரம் உள்ளே
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: நாளை முதல் வழங்கப்படும்