March 26, 2026

வலுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு – பிலிப்பைன்ஸில் தேசிய அவரச நிலை பிரகடனம்!

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரால் உலகம் முழுக்க கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகப்போகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட2000 -க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

ஈரான் அணுசக்தி ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சொல்லி அமெரிக்கா இந்த தாக்குதலை இஸ்ரேலுடன் இணைந்து முன்னெடுத்தது. இந்த தாக்குதலுக்கு ஈரானும் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டபிறகு அவரது மகன் மோஜ்தபா கமேனி கொல்லப்பட்டார்.

  

Grow Business with ACCAAcca Globalஅமெரிக்காவின் பேஸ் கேம்ப்புகள் அமைந்திருக்கக்கூடிய, வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய ஹார்மோஸ் நீரிணையையும் ஈரான் மூடி இருக்கிறது. இதனால் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த போர்ப்பதற்றம் மேற்காசிய நாடுகளிலும் பரவி வருவதால் உலகம் முழுவதும் மிக இக்கட்டான சூழலில் இருப்பதாக நிபுணர்கள் அஞ்சுகின்றனர் .

தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்திய பிலிப்பைன்ஸ்

இந்த சூழலில் தான் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் போரின் விளைவாக உலகம் முழுக்க கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.மேலும் நாட்டுக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்திருக்கிறார். மேலும் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையையும் அவர் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

https://198919bd7c32e2463d8de360b08d828b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பிலிப்பைன்ஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் நுகர்வோர் குழுக்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் பிலிப்பைன்ஸ் நாடு இந்த தேசிய எரிசக்தி அவசர நிலையை கடந்த செய்வாய் கிழமை பிரகடனப் படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்

நாடு முழுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் உணவு மருந்து விவசாய பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் சீராக விநியோகிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார்.

மேலும் இந்த அவசர பிரகடன நிலை ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த அவசர காலத்தில் பெட்ரோலிய மற்றும் எரிபொருள் பொருட்களை பதுக்கினாலோ அல்லது முறைகேடான முறையில் விற்றாலோ அவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அந்நாட்டின் எரிசக்தி துறையில் செயலாளர் பேசுகையில் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு எரிபொருட்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை கொள்முதல் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக கண்டனம்

ஆனால் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை தணிக்க மார்க்கோஸ் நிர்வாகம் திட்டமிடப்பட்ட முறையான நடவடிக்கைஎடுக்கவில்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த புவிசார் அரசியல் நெருக்கடி உலகம் முழுக்க பரவத் தொடங்கி இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகள் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. ஈரான் மீதான தாக்குதலை சில நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஈரான் இதை முற்றிலும் மறுத்து இருக்கிறது

Spread the love