February 7, 2026

“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்

“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” - ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்

சென்னை: 2047-க்​குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய வேண்​டு​மா​னால் அறி​வியல்​-தொழில்​நுட்​பத்​தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்​டும் என்று ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி வலி​யுறுத்​தி​னார்.

11-வது ஐஐடி தொழில்​முனை​வோர் உச்சி மாநாடு பிப்​ர​வரி 6 முதல் 8-ம் தேதி வரை ஐஐடி வளாகத்​தில் நடை​பெறுகிறது. நேற்று நடை​பெற்ற மாநாட்​டின் தொடக்க விழா​வில் ஐஐடி இயக்​குநர் காமகோடி பேசி​ய​தாவது: இந்தியாவின் வளர்ச்​சிப் பாதை​யிலும், 2047-க்​குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவ​தி​லும் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பம் மிக முக்​கியப் பங்கு வகிக்​கும்.

எனவே ஏஐ எனப்​படும் செயற்கை நுண்​ணறி​வு, செமிகண்​டக்​டர், குவாண்​டம் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட பல துறை​களில் அதிக கவனம் செலுத்த வேண்​டும். தொழில்​நுட்ப இறக்​கும​தியை குறைத்து ஆழ்ந்த தொழில்​நுட்​பத்​தில் தொழில்​முனை​வு​களை​யும் கண்​டு​பிடிப்​பு​களை​யும் ஊக்​கு​விப்​ப​தன் மூலம் உள்​நாட்டு திறன்​களை பலப்​படுத்​து​வதே இன்​றைய காலத்​தின் கட்​டா​யம்.

அந்த வகை​யில் இந்த பணியை ஐஐடி கடந்த 10 ஆண்​டு​களாக சிறப்​பாகச் செய்து வரு​கிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா​வும் யூனி​கார்ன் இந்தியா வெஞ்​சர்ஸ் நிறு​வன​மும் இணைந்து ரூ.600 கோடி மதிப்​பிலான ஆழ்ந்த தொழில்​நுட்ப நிதி​யத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

இந்த நிதி​யம், தேசிய பாது​காப்பு மற்​றும் நலன்​களு​டன் கூடிய அறி​வு​சார் சொத்​துரிமை, பொறி​யியல் புத்​தாக்க தொழில் நிறு​வனங்​களில் குறிப்​பாக ரோபோட்​டிக்​ஸ், விண்​வெளி தொழில்​நுட்​பம், பாது​காப்​புத் துறை, செமிகண்​டக்​டர் துறை​களில் முதலீடு செய்​யும். முதல்​கட்​ட​மாக 25-க்கு மேற்​பட்ட புத்​தாக்க தொழில் நிறு​வனங்​களுக்கு இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு காமகோடி பேசி​னார்​.

Spread the love