September 12, 2026

விளை நிலங்களில் உயர்மின் கோபுர மின்பாதை  அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்


   பவர் கிரிட் நிறுவனம்திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், நொச்சிபாளையத்தில் (நியூ புகலூர்) அமைந்துள்ள பவர்கிரிட் நிறுவனத்தின் துணை மின் நிலையம் முதல் துரம்பாடி கிராமம் பாரக்கடையில் அமைந்துள்ள அதானிக்கு சொந்தமான கரூர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் துணை மின் நிலையம் வரையும் அங்கிருந்து கரூர் மாவட்டம் பரமத்தியில் அமைந்துள்ள பவர்கிரிட் நிறுவனத்தின் துணை மின் நிலையம் வரையும் 400 கேவி உயர்மின் கோபுர மின்பாதை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

     இத்திட்டமானது திருப்பூர் கரூர் மாவட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தங்களது காற்றாலை மற்றும் சூரிய மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக விவசாயிகளின் சாகுபடி  நிலங்கள் முற்றிலும் அழியும்அபாயமும்  நிலத்தின் வழிகாட்டி மதிப்பும் குறையும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக   கருர் அருகே உள்ள பெரிய திருமங்கலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் அவர்கள் தலைமை வகித்தார் .மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி  கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
  இதில் விளை நிலங்கள் வழியாக உயர்மின்கோபுர பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
.விசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில்  சின்னசாமி  மெய்ஞான மூர்த்தி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

 

Spread the love