புதுடெல்லி: அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஹார்முஸ் ஜலசந்தியில் ‘எம்டி அல் பாஹியா’, ‘எம்டி மொம்பாசா’ ஆகிய 2 கப்பல்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு கப்பல்களிலும் இருந்த 46 பணியாளர்களில் 30 பேர் இந்திய மாலுமிகள் ஆவர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.
இந்நிலையில், கடல்சார் நிர்வாக பொது இயக்குநரகம் (டிஜிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: மறு உத்தரவு வரும் வரை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்துவதைத் தவிர்க்குமாறு கப்பல் உரிமையாளர்கள், கப்பல் மேலாளர்கள் மற்றும் மாலுமி வேலைவாய்ப்பு உரிமம் பெற்ற (ஆர்பிஎஸ்எல்) நிறுவனங்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தவிர, தகுதி வாய்ந்த அதிகாரிகளால் வெளியிடப்படும் வழி செலுத்தல் எச்சரிக்கைகள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் அறிவிப்புகளைக் கண்காணிக்க வேண்டும். சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு விதிகளின்படி தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
பிரதமர் இல்லத்தில் அமித் ஷா, நிதின் நவீன் அவசர ஆலோசனை
ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!!
முதல் பரிசு ரூ.30 கோடி: ஓணம் பம்பர் லாட்டரி கேரளாவில் அறிமுகம்