தேர்தலை ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கக்கூடிய சைதாப்பேட்டை வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழுமையான வெற்றியை திமுகவிற்கு பெற்றுத்தருவோம் என பேசியுள்ளார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி என்ற சூழல் நீடித்து வருவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களும் முகம் தெரிந்த அமைச்சர்களும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் அறிமுகப்படுத்தி அவர்களுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது முதல்வர் உட்பட திமுகவின் வேட்பளர் பலரும் வாக்கு சேகரிப்பில் பிசியாக இயங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் சைதாப்பேட்டையில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் கால்நடையாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று சைதாப்பேட்டையின் அனைத்து இடங்களிலும் கால்நடையாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்புக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” காலையிலேயே 6:00 மணிக்கு தொடங்கி ஏறத்தாழ 10 மணிக்கு மேலாக நடந்து சென்று மக்களை சந்தித்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகள் திமுக செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்போம் என கூறியிருக்கின்றனர். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தேடித் தருவோம். எங்களை பொறுத்தவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் பலமாக இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைப்போம், அதன் அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தமிழன் எங்களை விட பலமான வேட்பாளராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.
தேர்தல் வேலைகளில் வேகம் காட்டும் திமுக
தேர்தல் பிரச்சார பணிகள் ஒரு பக்கம் வேகம் எடுத்துக் கொண்டிருக்க கூடிய அதே நேரத்தில் கழக நிர்வாகிகளுடன் தேர்தல் சமயத்தில் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளுடன் இன்று நண்பகல் 12.00 மணிக்கு காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கேட்டுக்கொள்வதாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதி – நகரம் – ஒன்றியம் – வட்டக் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான கேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த கூட்டத்தில் காணொலி இணைப்பு தலைமைக்கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பு.
ஏன் இந்த தீவிரம்?
அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவது ஒரு புறம், மாவட்ட செயலாளர்கள் வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்புழக்கம் குறித்த ஆலோசனையில் ஈடுபடுவது மறுபுறம் என திமுக தேர்தல் வேலைகளை தீவிரப் படுத்திக் கொண்டே வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் களம் நான்கு முனை போட்டியை சந்தித்து வந்தாலும் கூட பெரும்பான்மையான வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் திமுக இருக்கிறது. ஒருவேளை திமுக குறைவான இடங்களில் வென்று தொங்கு சட்டமன்றம் உருவானால் அது நிச்சயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என திமுக தலைமை கருதுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அதோடு மட்டுமல்லாது கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உருவாக்கியிருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் இதை அனைத்தையும் மாற்றி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்கக் கூடிய திமுக தொடர்ந்து களப்பணிகளில் வெகு தீவிரமாக செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More Stories
சட்டமன்ற தேர்தல் 2026: புதுச்சேரி மக்களின் நலனே இலக்கு: தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சிகர வாக்குறுதிகள்!
விஜய் கார் மீது ஏறிய தொண்டர்கள்.. பரப்புரைக்கு செல்லும் வழியில் அதிர்ச்சி-சர்ச்சை கிளப்பிய வீடியோ!
“மத அடையாளத்தை தற்போது விஜய் வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன?” – நடிகர் கருணாஸ் கேள்வி