கால்பந்து வரலாற்றில் உலக சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி குறித்து…
கால்பந்து வரலாற்றில் மிகவும் குறைந்த போட்டிகளில் (அதிவேகமாக) 900 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
குறைந்த போட்டிகள் மட்டுமல்லாமல் குறைந்த வயதிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை நிறைவு செய்திருக்கிறார். அந்தப் பட்டியலில் மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மெஸ்ஸி (38 வயது) அமெரிக்காவில் இருக்கும் இன்டர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். கான்காகேஃப் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாஷ்வெல்லியுடன் விளையாடினார்.
இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி எதிரணியினர் சூழ்ந்திருந்தும் மிகவும் குறுகிய இடத்தில் இருந்தே கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. கடந்த சீசனில் மதிப்புமிக்க வீரர் விருது, தங்கக் காலணி விருது வென்று அசத்தினார். இன்டர் மியாமி அணியும் முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.Advertise with us
மெஸ்ஸி 900 கோல்களை 1,142 போட்டிகளில் அடித்துள்ளார். இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை 1,236 போட்டிகளில் அடித்திருந்தார். மேலும், மெஸ்ஸி இந்த மைல்கல்லை 38 ஆண்டுகள் 268 நாள்களிலும் ரொனால்டோ 39 ஆண்டுகள் 213 நாள்களில் அடித்துள்ளார்கள்.
அதிவேகமாகவும் குறைந்த வயதிலும் மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவில் 115, பார்சிலோனாவில் 672, பிஎஸ்ஜியில் 32, இன்டர் மியாமியில் 81 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்களும் விளையாட்டு பிரபலங்கள் மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More Stories
‘குடி’யை நிறுத்திவிட்டேன் – சாஹல் ‘ஓபன் டாக்’
ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ்
அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கார் வலியுறுத்தல்