April 5, 2026

அபகரிப்பு வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த யூடியூபர் வராகி மீண்டும் கைது!

வீட்டு உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த யூடியூப்பர் வாரகி மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் youtuberகள் சர்ச்சை கருத்தை பதிவிடுவதும் பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்த வராகி மீண்டும் கைதாகியுள்ளார்.

அதிகாரிகளிடம் பணம் பறிக்கும் நோக்கமா?

மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் தோனி ராஜனிடம் பணம் பறிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவர் குறித்து தவறான கருத்துக்களை பதிவிட்ட விவகாரத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் youtuber வராகி என்கின்ற கிருஷ்ணமூர்த்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

  

கொரோனா காலத்தில் பணியாற்றி வந்த மருத்துவ கல்வி இயக்குனரின் நற்பெயரை கெடுக்கும் வகையில்”ராஜீவ் காந்தி மருத்துவமனை லட்சணம் கொரோனா கொள்ளையனுக்கு பதவி உயர்வு, சுடுகாடான சுகாதாரத்துறை” என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டதற்காக அவர் இது புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட வலைதளத்தை நடத்தி வரக்கூடிய வராகி என்கிற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கோடு யூடியூபர் வராகி செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

வீட்டு உரிமையாளருடன் தகராறு

இதற்கிடையில் வீட்டு உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார் வராகி. ஆனால் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த youtuber வராகி ஜாமீன் முடிந்ததை அடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

சென்னை டி.நகர் பகுதியில் youtuber வராகி வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயன்றதுடன் வீட்டு உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக வீட்டு உரிமையாளர் அளித்து புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீசார் வராகியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

மேலும் வராகி மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், மிரட்டி பணம் பறித்தல், பெண்களிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு அளித்தல், போலி பத்திரப்பதிவு செய்தல், போலி ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 15 குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றன. இதனை அடுத்து வராகி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . அபகரிப்பு வழக்கை எதிர்த்து வராகியின் மனைவி நீலிமா சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு வராகி காவல்துறைக்கு எதிராக தனது youtube தளத்தில் கருத்து தெரிவித்து வந்ததுனாலேயே அவர் மீது பழிவாங்கும் நோக்கோடு குண்டர் சட்டம் பயந்துள்ளதாக வராகி தரப்பில் விவாதிக்கப்பட்டது இதனை விசாரித்த நீதிபதிகள் அரசுக்கு எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில் தான் நீதிமன்ற உத்தரவின் பெயரில் மூன்று மாத இடைக்கால ஜாமினில் வராகி வெளியே வந்தார். கடந்த 30 -ஆம் தேதியுடன் அந்த இடைக்கால ஜாமின் முடிவு அடைந்த நிலையில் வராகி நீதிமன்றத்தில் சரணடையாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக வராகி சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து நேற்றைய தினம் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Spread the love