பேச்சுவார்த்தைக்கான அரங்கம் தயார், பாதுகாப்பு பணியில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், அணுகு சாலையை ஒட்டியுள்ள நடைபாதை கற்கள் மஞ்சள் மற்றும் கருப்பு நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் காத்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா – இரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ள பாகிஸ்தான் நேர்மறையான குரலை வெளிப்படுத்தி வருகிறது. மற்றவர்களைப் போல அல்லாமல் இரு தரப்பின் நம்பிக்கையையும் தான் பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.
அமெரிக்க குழுவிற்கு தலைமை தாங்கும் துணை அதிபர் ஜேடி வான்ஸும் உற்சாகமாக இருக்கிறார்.https://flo.uri.sh/visualisation/25999072/embed?auto=1
“இரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் நாங்கள் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறோம்,” என அமெரிக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு வான்ஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். “அவர்கள் எங்களை ஏமாற்ற முயற்சித்தால், அப்போது பேச்சுவார்த்தை குழு மிகவும் இணக்கமாக இல்லை என்பதை அவர்கள் கண்டறிவார்கள்,” என்றார் அவர்.
மொத்தத்தில, மலையளவு தடைகள் எதிர்நோக்கி இருக்கின்றன என்பதை நிச்சயமாக தெரிவித்துக் கொள்ளலாம். அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள் என்ன?

More Stories
அமெரிக்கா – ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை நிறைவு – மத்தியஸ்தர்கள் அறிவிப்பு
திடீரென மிரட்டிய ட்ரம்ப்.. வெளிநடப்பு செய்த ஈரான்.. முடங்கிய முதற்கட்ட பேச்சுவார்த்தை!
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்