February 26, 2026

அரசியல் ஆட்டம் ஆரம்பம்! எடப்பாடி பக்கம் திரும்பிய சசிகலா! என்ன பேசினார் தெரியுமா?

“என் கணவரை பார்க்க பரோல் கேட்டபோது ஐந்து நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது” என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வரும் நிலையில், நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த சசிகலா நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார் சசிகலா. அதில் அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “என் கணவரை பார்க்க பரோல் கேட்டபோது ஐந்து நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது” என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Spread the love