July 28, 2026

ஆகஸ்ட் 4 முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட்

சென்னை: ஆகஸ்ட் 4 முதல் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் ​(டிஎன்சிஏ) நடத்​தும் ஸ்ரீராம் கேபிட்​டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடை​பெறவுள்​ளது. 10-வது ஆண்​டாக நடை​பெறும் இந்​தப் போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்​கின்​றன.

இந்த சீசனின் முதல்​கட்ட ஆட்​டங்​கள் திண்​டுக்​கலிலும், இறுதிக்கட்ட ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தி​லும் நடை​பெறவுள்​ளன.

திண்​டுக்​கல்​லில் நடை​பெறும் போட்டிகளுக்கான டிக்​கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்​றும், சென்​னை​ போட்டிகளுக்​கான டிக்​கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்​டு​களுக்​கு(லோயர்) ரூ.100 என்​றும், சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே ஸ்டாண்​டு​களுக்​கு(அப்​பர்) ரூ.150 என்​றும், கேஎம்கே டெரஸ் பகுதிக்கு ரூ.300 என்​றும், கேஎம்கே லோயர் பகு​திக்கு ரூ.500 என்றும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

Spread the love