பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான 2026–27ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு, எமிஸ் இணையதளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணையைத் துறைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும். ஜூன் 30ஆம் தேதியுடன் ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்கள் கட்டாயம் இடமாற்றம் செய்யப்படுவர். குரூப்-டி பணியாளர்கள், ஓட்டுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், 100 சதவீத பார்வையற்றோர் மற்றும் ஓராண்டுக்குள் ஓய்வுபெற உள்ளவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், தீவிர உடல்நலப் பாதிப்புள்ளவர்கள், ராணுவத்தினரின் வாழ்க்கைத்துணை, விதவைகள், 40 வயதுக்கு மேற்பட்ட தனிப் பெண்கள், விவாகரத்துப் பெற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்ப மாறுதலுக்கு தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும்; அதிகபட்சம் மூன்று இடங்களைத் தேர்வு செய்யலாம். கட்டாய மாறுதலுக்குப் பிறகே விருப்ப மாறுதல் பரிசீலிக்கப்படும். கலந்தாய்வு, காலிப்பணியிட விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் எமிஸ் இணையதளம் வழியாக நடைபெறும்.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்