சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் டெட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுகளை சுமார் 4.2 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இத்தேர்வுகளின் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் பிப்.2-ம் தேதி முதல் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை வெளியீடு… மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (90), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82) எடுக்க வேண்டும்.
இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு, அதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது நினைவுகூரக்கத்தக்கது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்