April 3, 2026

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி  தி.மு.க. வேட்பாளர் எம்.எல்.ஏ.மகாராஜன்தேர்தல் பிரச்சாரம்

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி  தி.மு.க. வேட்பாளர் எம்.எல்.ஏ.மகாராஜன்தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார்.          ஆண்டிபட்டி .ஏப்2,ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.மகாராசன் எம்.எல்.ஏ, ஆண்டிபட்டி ஒன்றியத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரச நாயக்கனூரில் தொடங்கினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.மகாராசன் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள திம்மரசநாயக்கனூர், பிள்ளை முகம் பட்டி, டி. பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம், டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி , மறவபட்டி, கதிர், ராஜதானி உள்பட 28 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கம்யூனிஸ்ட் வெங்கடேஷ் ,தி.மு.க.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செல்வம், ஒன்றிய அமைப்பாளர் அர்ச்சுணன், மாவட்டமாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், பொம்மிநாயக்கன்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அஷ்சயா ராம்குமார், டி. சுப்புலாபுரம் கார்த்தி, செல்லப்பாண்டி, ராஜகோபாலன்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்வேல்மணி பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் மகாராசன் எம்.எல்.ஏவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Spread the love