March 31, 2026

ஆண்டிபட்டி தொகுதி, கம்பம் தொகுதி வேட்பாளர்களுக்கு தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு.

ஆண்டிபட்டி: மார்ச். 31;

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, கம்பம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக, தற்போது சிட்டிங் எம்எல்ஏ-வாக உள்ள மகாராஜன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக வேட்பாளர் மகாராஜன் நேற்று ஆண்டிபட்டி தொகுதிக்கு வருகை தந்தார்.

அவருடன் கம்பம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ராமகிருஷ்ணனும் வருகை புரிந்தார். மாவட்ட எல்லையான கணவாய் மலைப் பகுதியில் இரு வேட்பாளர்களுக்கும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுமணி தலைமையில், மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் முன்னிலையில் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொண்ட மநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், பேரூர் சார்பு அணிகள் சார்பில் வேட்பாளர்கள் மகாராஜன் மற்றும் ராமகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி நகர் முக்கிய வீதிகள் வழியாக வேட்பாளர்கள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

Spread the love