எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி தான் ஆர்யா சாருடன் சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் பற்றி ரசிகர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.
ஆர்யா கல்யாணம்: ஆர்யாவுக்கு மணப்பெண் தேட எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சியை நடத்தினார்கள். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டார்கள். ஆர்யா நமக்கே என்கிற நம்பிக்கையில் வந்த 16 பேரில் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்தது அபர்ணதி தான். ஏதோ ஆர்யா தன் கழுத்தில் தான் தாலி கட்டுவார் என்பது போன்று அவரிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டார். அந்த காரணத்திற்காகவே பலரும் அபர்ணதியை சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.
Choose Care Health InsuranceCare Health Insuranceஇந்த பெண் போகிற போக்கை பார்த்தால் ஆர்யா சிக்கிவிடுவாரோ என்று அப்பொழுது பேசப்பட்டது. ஆனால் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேரில் ஒருவரை அல்ல மாறாக நடிகை சயீஷாவை கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆர்யா. அவர்களுக்கு 5 வயதில் அரியானா என்கிற மகள் இருக்கிறார்.
அபர்ணதி படங்கள் : அபர்ணதியோ பட வாய்ப்புகள் வரவே கோலிவுட்டுக்கு சென்றுவிட்டார். தேன் படத்தில் அபர்ணதியின் நடிப்பை பார்த்த அனைவருமே அவரை பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார் அபர்ணதி.
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இறுகப்பற்று படத்தில் விதார்த் மனைவியாக நடித்து ஸ்கோர் செய்தார் அபர்ணதி. அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை ஒரு முறை கூட ஆர்யா உடன் சேர்ந்து நடித்தது இல்லை. இந்நிலையில் ஆர்யா உடன் சேர்ந்து நடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
பேட்டி ஒன்றில் அபர்ணதி கூறியதாவது, எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஆர்யாவுடன் பயணித்திருக்கிறேன். அப்பொழுது நல்ல மெமரீஸ் கிடைத்தது. அதனால் போலியான கதைக்காக காதலி அல்லது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அந்த காரணத்தால் தான் நான் ஆர்யா உடன் சேர்ந்து படம் பண்ண விரும்பவில்லை என்கிறேன் என்றார்.
இன்ஸ்டா ஃபாலோயர்ஸ்: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி தன் கணக்கில் தன் பெயரை அபர்ணதி 6ya அதாவது ஆர்யா என வைத்திருக்கிறார். திருமணமான ஒருவரின் பெயரை போய் உங்களின் பெயருக்கு பின்னால் வைத்திருப்பது சரியில்லை அபர்ணதி. ஆர்யா ஒரு முடிந்து போன விஷயம். அது ஒரு ஷோ, அவ்வளவு தான். அப்படி இருக்கும்போது இன்னும் அவரையே நினைத்துக் கொண்டிருப்பது சரியில்லை என்று அபர்ணதிக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஃபாலோயர்களை வைத்து தான் பட வாய்ப்பும், சம்பளமும் வருகிறது என்று நடிகர் ஷா ரா அண்மையில் உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் தன்னுடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவி செய்யுமாறு கேட்டிருந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை என்று தெரிவித்துள்ளார் அபர்ணதி.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்சுமார் 21 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் ஆர்யா கையில் தற்போது மூன்று படங்கள் இருக்கிறது. அவர் தன் படம் உண்டு, குடும்பம் உண்டு என்று இருக்கிறார். அதனால் ஆர்யாவின் பெயரை இன்ஸ்டா ஹேண்டிலில் இருந்து நீக்கிவிட்டு, அவரின் நினைவுகளை அழித்துவிட்டு, புது நினைவுகளை உருவாக்கி சந்தோஷமாக வாழுங்கள் அபர்ணதி என்கிறார்கள் ரசிகர்கள்.

More Stories
ரஜினி மற்றும் கமல் படத்தில் ஹீரோயின்கள் யார்? வெளியான முக்கிய தகவல்!
சூர்யா – 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்
இசை அமைப்பாளரை மணந்தார் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்