நடிகர் தியாகராஜன் எழுதி, இயக்கிய ‘பூவுக்குள் பூகம்பம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.பி. வெங்கடேஷ் என்கிற சங்கீத ராஜன் (70).
சேலம் விஷ்ணு, காவல் பூனைகள், வடக்குவாசல், என் கணவர், ஏர்போர்ட், சினேகிதி, முனி முதல் பாகம், பாட்டாளி மகன் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.
பல திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.ஒரு வருடமாக நுரையீரல் பிரச்சினைக்குச் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு, போரூர் மயானத்தில் இன்று நடைபெறுகிறது. அவர் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த சங்கீத ராஜனுக்கு கோபால், சுகுமார் என்ற மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

More Stories
“100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவு..” – கலங்கி பேசிய விக்ரமன் | R B Choudary | Vikraman
இன்று அஜித், ஷாலினியின் 26வது திருமணநாள்: எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க