June 7, 2026

இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஆஸ்திரேலிய நிறுவனம்

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏர்​டிரங்க் என்ற ஏஐ நிறுவனம் இந்தியா​வில் ரூ.3 லட்​சம் கோடியை முதலீடு செய்கிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஏர்​டிரங்க் நிறு​வனம் செயல்​படு​கிறது. இது, ஆசி​யா, பசிபிக் பிராந்​தி​யத்​தில் மிகப்​பெரிய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) நிறுவனம் ஆகும். வங்​கதேச வம்​சாவளியை சேர்ந்த ராபின் குதா 2015-ம் ஆண்​டில் ஆஸ்​திரேலி​யா​வில் ஏர்​டிரங்க் நிறு​வனத்தை தொடங்​கி​னார். தற்​போது இந்​தி​யா, ஜப்​பான், சிங்​கப்​பூர், மலேசியா, ஹாங்​காங் உட்பட பல்​வேறு நாடு​களில் அந்த நிறுவனத்தின்கிளை​கள் செயல்​படு​கின்​றன.

இந்​தி​யா​வில் மும்​பை, சென்​னை, ஹைத​ரா​பாத் நகரங்​களில் ஏர்​டிரங்க் நிறு​வனத்​தின் மிகப்​பெரிய டேட்டா சென்​டர்​கள் செயல்படு​கின்​றன. இந்த நிறுவன தலை​வர் ராபின் குதா டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்​தார். அப்​போது வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் ரூ.3 லட்​சம் கோடியை ஏர்​டிரங்க் முதலீடு செய்​யும் என்று அறி​வித்​தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளியிட்ட பதி​வில், ‘‘ஏர்​டிரங்க் நிறு​வனத்தின் முதலீடு இந்தியாவின் டிஜிட்​டல் உள்​கட்​டமைப்​பில் மிகப்​பெரியது. கிளவுட் கம்ப்​யூட்​டிங் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு துறை​யில் உலகின் மைய​மாக இந்​தியா உரு​வெடுத்து வரு​கிறது. ஏர்​ டிரங்க் நிறுவன முதலீட்​டால் இந்த துறை​யில் இந்​தியா மேலும் வேக​மாக முன்னேறிச் செல்​லும். நாட்​டில் வேலை​வாய்ப்​பு​கள் கணிச​மாக பெரு​கும்’’ என்று கூறியுள்ளார்.

Spread the love