June 13, 2026

இந்திய மாலுமிகளின் கப்பல்களில் தொடர்ந்து தாக்குதல்: அமெரிக்க தூதரை 2-வது முறை அழைத்து வெளியுறவுத் துறை கண்டனம்

புதுடெல்லி: இந்திய மாலுமிகள் பணியாற்றும் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை 2-வது முறை அழைத்து வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது.

போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டு ஈரான் துறைமுகத்துக்கு செல் லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து வருகிறது. மீறிச் செல் லும் கப்பல்கள் மீது அமெரிக்கப் படை குண்டு வீசி முடக்குகிறது. முதலில் ‘எம்டி மாரிவெக்ஸ்’ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பணியாற்றிய 24 இந்திய மாலுமிகளுக்கு பாதிப்பில்லை.

2-தாக ஓமன் வளைகுடா அருகே கடந்த 10-ம் தேதி ‘எம்டிசெட்டபெல்லோ’ கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ‘எம்டி ஜல்வீர்’ என்ற கப்பல் மீது அமெரிக்கப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 20 இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். கடந்த நாட்களில் இந்திய மாலுமிகள் பணியாற்றும் 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதிகளில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு எண்ணெய் கப்பல் களில், இந்திய மாலுமிகள் 18,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளானதால், வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மூலமாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸுக்கு 2-வது முறை நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.

வளைகுடாவில் வர்த்தக கப்பல்களுக்கு, அமெரிக்க படையால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

Spread the love