புதுடெல்லி: ராகுல் திராவிட்டின் இளைய மகன் அன்வே திராவிட் இந்திய யு-19 அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் ஜூலை 4 முதல் 20 வரை நடைபெறுகிறது.
இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான யு-19 இந்திய அணியில் ராகுல் திராவிட்டின் இளைய மகனான 17 வயதான அன்வே திராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். அன்வே திராவிட் கர்நாடக யு-19 அணியை வழிநடத்தி வினு மன்கட் டிராபி தொடரில் காலிறுதி வரை அழைத்துச் சென்றிருந்தார். அந்தத் தொடரில் 6 ஆட்டங்களில் விளையாடிய அன்வே திராவிட் 220 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்திருந்தார்.

More Stories
“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது” – ஸ்டீபன் பிளெமிங் மனம் திறப்பு
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை