April 24, 2026

இன்று அஜித், ஷாலினியின் 26வது திருமணநாள்: எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க

இன்று தங்களின் 26வது திருமணநாளை கொண்டாடும் அஜித் குமார், ஷாலினிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். couple goals இவர்கள் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முக்கிய அம்சங்கள்:

  • அஜித், ஷாலினியின் திருமணநாள்
  • அஜித், ஷாலினிக்கு குவியும் வாழ்த்து
  • காதல் திருமணம் செய்த அஜித், ஷாலினி

வாழ்த்துக்கள் அஜித், ஷாலினி: சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித் குமாருக்கு ஷாலினி மீது காதல் வரவே உடனே ப்ரொபோஸ் செய்து குடும்பத்தார் சம்மதத்துடன் 24-04-2000 அன்று திருமணம் செய்து கொண்டார். அனௌஷ்கா, ஆத்விக் என்கிற குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர்.

  

அஜித் குமாருக்கும், ஷாலினிக்கும் திருமணமாகி இன்றுடன் 26 ஆண்டுகளாகிவிட்டது. பக்கா ஃபேமிலி மேன் என்று கொண்டாடப்படும் அஜித் குமார், அவரின் மனைவி ஷாலினி இன்று போன்று என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் என்று பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.

அமர்க்களமான காதல்: அமர்க்களம் படத்தில் நடிக்குமாறு ஷாலினியிடம் இயக்குநர் சரண் கேட்டதற்கு நான் படிக்கப் போகிறேன், நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு அஜித்தை விட்டு ஷாலினியிடம் பேச வைத்திருக்கிறார்கள். முதலில் யோசித்தவர் பின்பு நடிக்கிறேன் என்று கூறி நடித்தார். ஒரு காட்சியில் ஷாலினியின் கையை நிஜமாகவே கத்தியால் கிழித்துவிட்டார் அஜித் குமார்.

கையில் இருந்து ரத்தம் வந்ததை பார்த்து மம்மி, டாடினு கத்தி கதறவில்லை ஷாலினி. மாறாக பரவாயில்லை என்று நிதானமாக கூறியிருக்கிறார். ஒரு சின்ன பெண்ணுக்கு இவ்வளவு பொறுமையா, நிதானமா என்று அப்பொழுதே இம்பிரஸ்ஸாகிவிட்டார் அஜித் குமார். காதல் வந்தால் அதை மறைத்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று படப்பிடிப்பு நடந்தபோதே ப்ரொபோஸ் செய்துவிட்டார்.

ஷாலினியும் அஜித் குமாரின் காதலை உடனே ஏற்றுக் கொண்டார். உன் குடும்பத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று ஷாலினிக்கு கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காப்பாற்றி வருகிறார். அஜித் குமாரின் கெரியரில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டது. அப்பொழுது எல்லாம் அவருக்கு ஆறுதலாக, துணையாக இருந்தார் ஷாலினி.

கார் பந்தயங்கள்: ஒரு கட்டத்தில் நான் மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பிச் செல்கிறேன் என்று அஜித் குமார் கூறியபோது பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். உங்களுக்கு 50 வயதை தாண்டிவிட்டது. இனிமேல் போய் கார் ரேஸுக்கு போகிறேன் என்று சொல்லலாமா என ஷாலினி கேட்கவில்லை. மாறாக உங்களின் சந்தோஷமே என் சந்தோஷம் என்றார்.

50 வயதுக்கு மேல் கார் ரேஸுக்கு திரும்பி வந்த அஜித் குமார் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறார். அண்மையில் பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி இரண்டாவது இடம் பிடித்த வீடியோவை பார்த்து பெருமைப்படாதவர்களே இல்லை.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ஷாலினி. தன்னை நம்பி வந்த பெண்ணை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறார் அஜித் குமார். அவரை தற்போதும் ஷாலினி பார்க்கும் விதத்தில் இருந்தே எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தெரிகிறது என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

முன்னதாக நடிகையை கல்யாணம் பண்ணாதே அஜித். அந்த வாழ்க்கை நிலைக்காது என்று அவரை எச்சரித்திருக்கிறார் ரமேஷ் கண்ணா. ஆனால் கட்டினால் ஷாலினியை தான் கட்டுவது என்பதில் உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டார்.
என் கணவரின் மனைவி: இன்ஸ்டா ஸ்டோரியில் பாராட்டிய ஆர்த்தி ரவிடிரெண்டில் ஏ.கே.: நேற்றில் இருந்தே சமூக வலைதளங்களில் அஜித் பேச்சு தான். ஓட்டு போட வெள்ளை நிற கோட் சூட்டில் ராஜா மாதிரி வந்திருந்தார். இந்த வெயிலில் கோட் சூட்டா என்று கேட்டபோதிலும் தல சும்மா ஜம்முனு சூப்பரா இருக்கு என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்தமிழகத்தின் முதல் வாக்கை பதிவு செய்தவர் அஜித் குமார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு முன்பே அவர் வாக்களித்ததால் அந்த பெருமைக்குரியவராகிவிட்டார். வாக்களிக்க வந்தபோது அவர் கையில் செல்போனை பார்த்த ரசிகர்களுக்கு அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. ஏ.கே. செல்போன் பயன்படுத்துகிறாரா என்று வியந்துவிட்டார்கள்.

Spread the love