அகில இந்திய அளவில் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் வியாழக்கிழமை (பிப்.12) கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அனைத்து ஊழியா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அகில இந்திய அளவில் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் எவ்வித இலாப நோக்கமும் இன்றி தனது சேவையை செய்து வருவதால், தொழிலாளா்கள் அனைவரும் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரவிடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவா்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். இந்த உத்தரவின்படி பணிக்கு வராத தொழிலாளா்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளா்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
“எங்களுடைய சாதனைகளை, அடுத்த ஆட்சியில் நாங்களே முறியடிப்போம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
என்எல்சி நிறுவனத்தில் ரூ.442 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
ரேஷன் கார்டு பிரச்சனையா? சென்னையில் மெகா முகாம்: 10 முக்கியத் தகவல்கள்!