February 7, 2026

“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்

ஓய்வு பெற்​ற ராணுவ அதிகாரி பிரி​கேடியர் தீப் பகத்

ஓய்வு பெற்​ற ராணுவ அதிகாரி பிரி​கேடியர் தீப் பகத்

புதுடெல்லி: ‘‘ஆ​யுதமில்​லாமல் திரும்​ப​வும் வரு​வேன் என்று கற்​பனை செய்து கூட பார்க்​க​வில்​லை’’ என்று காஷ்மீரைப் பற்றி முன்​னாள் ராணுவ அதி​காரி வெளி​யிட்ட வீடியோ வைரலாகி வரு​கிறது.

ஜம்மு காஷ்மீரின் சோபி​யான் மாவட்​டத்​தில் ராணுவ வீர​ராகப் பணி​யில் சேர்ந்து 30 ஆண்​டு​கள் படிப்​படி​யாக பல்​வேறு பதவி​களை வகித்து ஓய்வு பெற்​றவர் பிரி​கேடியர் தீப் பகத். இவர் சமீபத்​தில், தான் பணி​யாற்​றிய சோபி​யான் மாவட்​டம் உட்பட பல இடங்​களுக்கு சுற்​றுலா சென்று வந்​துள்​ளார். அப்​போது ஒட்​டுமொத்த காஷ்மீர் மாறி​யுள்​ளதை இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ​வாக வெளி​யிட்​டுள்​ளார். அது தற்​போது வைரலாகி வரு​கிறது. அந்த வீடியோ​வில் தீப் பகத் கூறி​யிருப்​ப​தாவது:

ஜம்மு காஷ்மீரில் கமாண்டோ பள்ளி பயிற்​சி​யாளர் உட்பட பல பதவி​களில் பல இடங்​களில் பணி​யாற்றி இருக்​கிறேன். குறிப்​பாக சோபி​யான் மாவட்​டத்​தில் பணி​யாற்றி இருக்​கிறேன். அங்கு தீவிர​வாத தாக்​குதல்​கள் தினம் தினம் நடை​பெறும். இந்த இடத்​துக்கு என் வாழ்​நாளில் ஆயுதங்​கள் இல்​லாமல் மீண்​டும் திரும்பி வரு​வேன் என்று கற்​பனை செய்து கூட பார்க்​க​வில்​லை. அந்​தளவுக்கு அமைதி திரும்பி இருக்​கிறது.

சோபி​யானுக்​குள் நுழைகிறேன். எந்த ஆயுத​மும் என்​னிடம் இல்​லை, எந்​தப் பாது​காப்​பும் இல்​லை. ஆனால், அப்​படியொரு அமைதி நில​வு​கிறது. இதை நினைத்​துக் கூட பார்க்​க​வில்​லை. கடந்த 90-கள் மற்​றும் 2000-ம் ஆண்​டு​களில் இங்கு ராணுவத்​தில் பணி​யாற்​றிய​வர்​கள் யாரும், ஆயுதங்​கள் இல்​லாமல் திரும்பி வரு​வோம் என்று நினைத்​துப் பார்த்​திருக்க மாட்​டார்​கள்.

சோபி​யானில் வன்​முறை​கள் சர்வ சாதா​ரணம். எல்லை தாண்​டிய தீவிர​வாத (பாகிஸ்​தான்) தாக்​குதல் உச்ச கட்​டத்​தில் இருந்​தது. ஆனால் தற்​போது இங்​குள்ள சூழ்​நிலை​யைப் பார்க்​கும் போது மிக​வும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறது. இங்கு என்​னுடைய பைக்​கில் சுற்​றுலா பயணி​யாக வந்​தேன். சோபி​யான், அஹர்​பால், யூஸ்​மார்க் உட்பட பல இடங்​களுக்கு பைக்​கில் நண்​பர்​கள் சிலருடன் சுற்​றிப் பார்த்​தோம்.

எந்த ஆயுத​மும் இல்​லை, எந்த பாது​காப்​பும் தேவைப்படவில்​லை. திறந்த சாலைகள், திறந்த மனங்​கள் கொண்ட மக்​கள். ஒரு காலத்​தில் எப்​போதும் பதற்​ற​மாக இருந்த சோபி​யான் இன்று என்னை அமை​தி​யுடன் வரவேற்​றது. இது​தான் காஷ்மீரின் மாற்​றம். இது​தான் நம்​பிக்​கை. இது பெருமை அளிக்​கிறது. இவ்​வாறு ஓய்வு பெற்ற பிரி​கேடியர் தீப் பகத் கூறி​யுள்​ளார். இவரது வீடியோவை 4.4 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பார்​வை​யிட்​டுள்​ளனர்.

Spread the love