April 7, 2026

இராசிபுரம் : அருந்ததியர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் …

 ராசிபுரம்(தனி)திமுக வேட்பாளர் மா.மதிவேந்தனுக்கு ஆதரவாக நகரம், பேரூர் ,ஒன்றியம் பகுதியில் உள்ள அருந்ததியர் மக்களை கிராமங்களுக்கு சென்று  சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு ..

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள RMC காலனியில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் திமுக கழக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வாஜ் ஆதரவு திரட்டினார்.

 இதைத்தொடர்ந்து , சேந்தமங்கலம் பிரிவு ரோடு , வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு போன்ற பகுதிகளில் அதிகமாக வாழும் அருந்ததியர் மக்களை சந்தித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்துடன், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு மா மதிவேந்தன் என்னென்ன நலத்திட்ட உதவிகள் செய்தார் என்பதை பட்டியலிட்டு விளக்கினார்.

ராசிபுரம் (தனி) தொகுதி சட்டமன்ற வேட்பாளராக மீண்டும் வாய்ப்பு பெற்ற மா. மதிவேந்தனை ஆதரித்து, வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 இந்நிலையில்  மதி வேந்தனுக்கு ஆதரவாக கிராம மக்களுடன்  கலந்துரையாடிய திமுக கழக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், கடந்த கால சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 இதேபோல் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் , அப்பகுதி மக்களிடம் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மா மதி வேந்தனுக்கு மீண்டும் அதிகப்படியான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

Spread the love