பட்டா வழங்கிய MP-யின் காலில் கண்ணீருடன் விழுந்து நன்றி தெரிவித்த முதியவர் . ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 40 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனையாக நாளைக்கு இன்னொரு பகுதியில் விவசாய பட்டாக்கள் 972 வழங்கப்பட்டுள்ளது இதன் மதிப்பு சுமார் 60 கோடியை என பேச்சு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள கார்கூடல்பட்டி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த வீட்டுமனை பட்டாவை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் இன்று வழங்கினார் .
நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டாவை வழங்கிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என் இராஜேஷ்குமார் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த மலைவாழ் மக்கள், பழங்குடியினர் மற்றும் ஏழைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
இன்று ராசிபுரம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 128 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவானது சுமார் 1.21 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் பட்டா பெற வந்த முதியவர் கண்ணீருடன் பட்டாவை பெற்றுக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என். இராஜேஷ்குமார் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார் .


More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்