இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதற்கட்ட தாக்குதல்…

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய பகுதிகளைக் குறிவைத்து சனிக்கிழமை (பிப். 28) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால், இஸ்ரேன் மற்றும் ஈரானின் வான்வழிப் பாதைகளை மூடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதல் அலையான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக, ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஈரானின் பதில் தாக்குதலை எதிர்பார்த்து இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, அபயாஒலிகள் எழுப்பப்பட்டன. இதனால், ஈரான் ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ஓராண்டுக்குள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் – ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல்
ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! பாக். பிரதமர், ராணுவத் தளபதியைப் புகழ்ந்த டிரம்ப்!