டெல் அவிவ்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 900-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் படை கள் தாக்குதல் நடத்தின. 6 விநாடிகளில் அங்கு கட்டப்பட்டிருந்த அந்த பெரிய கட்டிடம் தூள் தூளானது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் 12 பேர் உயிரிழந்தனர் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், 41 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் மத்திய, தெற்குப் பகுதிகளிலும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி ஏஜென்சி (என்என்ஏ) தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் உள்ள பகுதியான ஜுகாக் அல்-பிளாட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த அடுக்குமாடி குடியிருப்பு இந்தத் தாக்குதலில் முற்றிலுமாக சிதைந்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதைப் போலவே சென்டிரல் பஸ்டா மாவட்டத்திலுள்ள 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் அந்தக்கட்டிடங்கள் சேதமடைந்தன.

More Stories
ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி தீர்க்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
80,000 டன் கச்சா எண்ணெய் உடன் முந்த்ரா துறைமுகம் வந்தது ‘ஜக் லாட்கி’
மூத்த தலைவர் அலி லார்ஜானி மகள், மகனுடன் கொல்லப்பட்டார்! உறுதிசெய்தது ஈரான்!