August 17, 2026

உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 7 சரக்கு குடோன்கள் தீக்கிரை

மாஸ்கோ: உக்ரைன் ராணுவத்​தின் ட்ரோன் தாக்​குதல்​களில் ரஷ்ய நிறு​வனத்​தின் 7 சரக்கு குடோன்கள் தீக்​கிரை​யாகி உள்ளன. ரஷ்​யா​வில் வைல்​டு​பெரிஸ் என்ற இ-காமர்ஸ் நிறு​வனம் செயல்படு​கிறது. இது அந்த நாட்​டின் மிகப்​பெரிய வர்த்தக நிறுவனம் ஆகும். தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யா முழு​வதும் வைல்​டு​பெரிஸ் நிறு​வனத்​துக்கு ஏராள​மான சரக்கு குடோன்​கள் உள்​ளன.

மாஸ்கோ அருகே கெலிடினோ பகு​தி​யில் உள்ள குடோன் மீது உக்ரைன் ஒரே நேரத்​தில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட ட்ரோன்​கள் குண்டு​களை வீசின. இதில் அந்த குடோன் முழு​மை​யாக தீக்கிரையானது. இதே​போல டெமோடிடெவோ, வினுகோவா உள்ளிட்ட இடங்​களில் உள்ள வைல்​டு​பெரிஸ் நிறுவன குடோன்கள் மீது ட்ரோன்​கள் குண்​டு​களை வீசின. ஒட்டுமொத்தமாக 7 குடோன்​கள் தீயில் எரிந்து சாம்​பலாகின. இதில் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள பொருட்​கள் நாச​மாகின.

இதுதொடர்​பாக மாஸ்கோ மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கூறும்​போது, “ட்ரோன் தாக்கு தலில் ஒரு​வர் உயி​ரிழந்​தார். 6 பேர் காயமடைந்​தனர்” என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து ரஷ்ய ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “உக்​ரைன் ராணுவத்​துக்கு தகுந்த பதிலடி கொடுத்து வரு​கிறோம். கடந்த ஒரு வாரத்​தில் 1,550 ட்ரோன்​கள் மூலம் உக்​ரைனின் ராணுவ தளங்​கள் மீது தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன.

போர் விமானங்​கள் மூலம் 1,560 குண்​டு​கள் வீசப்​பட்டு உள்​ளன. 62 ஏவு​கணை​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. எங்களது தாக்​குதல்​களை மேலும் தீவிரப்​படுத்​து​வோம். குறிப்​பாக உக்​ரைனின் ஆயுத உற்​பத்தி ஆலைகள்​ தரைமட்​ட​மாக்​கப்​படும்​” என்​று தெரிவித்​தன.

Spread the love