June 13, 2026

உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது: உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: உணவுப் பொருட்​கள் மற்​றும் உணவு பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்று இந்​திய உணவு பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளது.

செய்​தித்​தாளில் உள்ள அச்​சுமை​யில் தீங்கு விளைவிக்​கும் ரசாயனங்​கள் உள்​ளன. எனவே உணவுப் பொருட்​களை செய்​தித்​தாள்​களில் பொட்​டலம் கட்​டக்​கூ​டாது என்று இந்​திய உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) சில நாட்​களுக்கு முன்பு உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்து எப்​எஸ்​எஸ்ஏஐ நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: உணவுப் பொருட்​கள் மற்​றும் அலங்​கார கேக்​கு​களில் மறைந்​திருக்​கும் உலோக ஊசிகளை பொது​மக்​கள் விழுங்​கி​விடும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

இதனால் அவர்​களின் உடல்​நலம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறது.

எனவே உணவுப் பொருட்​கள், அலங்​கரிக்​கப்​பட்ட கேக்​கு​கள், கேக் பெட்​டிகள், இனிப்பு பெட்​டிகள், தின்​பண்ட பொட்​டலங்​கள், உணவு பார்​சல்​கள், உணவுப் பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை கண்​டிப்​பாக பயன்​படுத்​தக்​கூ​டாது.

இந்த அறி​வுறுத்​தலை மீறு​வோர் மீது உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய சட்ட விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு எப்​எஸ்​எஸ்ஏஐ உத்​தர​வில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

Spread the love