April 2, 2026

எம்.எல்.ஏ -க்களை ஏலம் எடுத்துதான் சி.எம் ஆனார் – எடப்பாடியை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தலை முன்னிட்டு திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திருச்சி 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். திருச்சி 9 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிகளில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, திமுக வேட்பாளர்களும், துறையூர், மணப்பாறை தொகுதியில் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி என கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் இரண்டு தொகுதியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

காலையிலேயே வாக்கு சேகரித்த முதல்வர்

இன்னும் சில நாட்களில் தேர்தல் வந்துடவிடும் என்பதால் திமுக தலைமை தீவிர தேர்தல் பரப்புரை வேளையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி காந்திநகர் மார்க்கெட் பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதய ராஜ்க்கு வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து பாலக்கரை பகுதியில் தேநீர் கடையில் தேநீர் அருந்திய பின்னர் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என் நேருக்கு பீமா நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

  

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், “மீண்டும் மீண்டும் திருச்சிக்கு நான் வருவது மீண்டும் மீண்டும் திராவிட ஆட்சி வரவேண்டும் .அதற்கு நீங்கள் தயாரா என மக்களை பார்த்து கேட்டார்” கடந்த முறை திருச்சியில் முழு வெற்றி கொடுத்தீர்கள் இந்த முறையும் முழு வெற்றி தருவீங்களா என கேட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார். அதில்,

  1. திருச்சிராப்பள்ளி மேற்கு: கே. என். நேரு
  2. திருவெறும்பூர்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  3. திருச்சிராப்பள்ளி கிழக்கு: முனைவர் இனிகோ இருதயராஜ்
  4. திருவரங்கம்: எஸ். துரைராஜ்
  5. முசிறி: கருணைராஜா
  6. லால்குடி : பாரிவள்ளல்
  7. மணச்சநல்லூர் : கதிரவன்
  8. மணப்பாறை: அப்துல் சமது (மமக – உதயசூரியன் சின்னத்தில்)

ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்டம் 8 சட்டமன்ற தொகுதி நேரில் அறிமுகப்படுத்திய பின்னர் பேசிய முதல்வர்,
நீங்க வெயிலில் காத்துக் கொண்டே இருப்பதால் தலைப்புச் செய்திக்கான லிஸ்டை போட காத்திருக்கிறேன் என பேசிய அவர் “இது என்ன பஸ் ஸ்டாண்டா ஏர்போர்டா என்பது போல் வியப்பை ஏற்படுத்தக்கூடிய பஞ்சப்பூர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், சரக்கு வாகன போக்குவரத்து முனையம் கட்டி தந்துள்ளோம்.

தலைநகர் சென்னைக்கே சவால் விடும் அளவிற்கு திருச்சியில் திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். ஐந்து வருடங்களை திருச்சிக்காக 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே உரிமையாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன்” என கூறி திமுக அரசின் திட்டங்களையும் தேர்தலில் அறிக்கையையும் சொல்லி வாக்கு சேகரித்தார்.

இபிஎஸ் -ஐ கடுமையாக தாக்கிய முதல்வர்

  • மதுரையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பெரியார் படத்தை எடுக்க சொன்னபோது எடப்பாடி பழனிச்சாமி அமைதி காத்தார் என மதுரை சம்பவத்தை சுட்டிக்காட்டி முதல்வர் பேசியிருக்கிறார்.
  • பாஜக கூட்டணியில் சேர்ந்து முழு சந்திரமுகியாகவே மாறிவிட்டார். முழு சங்கியாகவே மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என் விமர்சித்திருக்கிறார்.
  • அதிமுக ஆட்சியில் கொடுத்த மிக்சி, கிரைண்டர், டிவி அனைத்தும் காயலான் கடையில் இருப்பதாக விமர்சித்தார்.
  • 2021ல் மகளிர்க்கு 2000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என திமுக கூறியபோது உடனே நாங்களும் 2500 ரூபாய் தருகிறோம் எனக்கு கூறினார் எடப்பாடி பழனிச்சாமி என விமர்சித்திருக்கிறார்.
  • அதிமுகவை அடிமை கட்சியாக மாற்றியது தான் எடப்பாடியின் சாதனை என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் . எம்.எல்.ஏ -க்களை ஏலம் எடுத்து முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி.
  • சி.ஏ.ஏ மற்றும் வேளாண் சட்டங்களை பாஜக கொண்டு வந்த போது பழனிச்சாமி கண்ணை மூடிக்கொண்டு அவற்றை ஆதரித்ததாக விமர்சித்திருக்கிறார்.
Spread the love