February 9, 2026

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி: புறநகர் மின்சார ரயில்​ இயக்கத்தில் மாற்றம்

கோப்புப் படம்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் சீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இதன் காரண​மாக, பிப்​.8-ம் தேதி (நேற்​று) முதல் 18-ம் தேதி வரை அங்கு புறநகர் மின்​சார ரயில்​கள் இயக்​கத்​தில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

நடைமேடை மாற்​றம்: புறநகர் மின்​சார ரயில்​கள் மேற்​கண்ட நாட்​களில் இரவு 9 மணி முதல் அதி​காலை 5 மணி வரை 10, 11-வது நடைமேடைகளுக்கு பதிலாக 5, 6-வது நடைமேடைகளில் வந்து செல்​லும்.

செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரைக்கு செல்​லும் ரயில்​கள் 5-வது நடைமேடை வழி​யாக​வும், மறு​மார்க்​கத்​தில், கடற்​கரை​யில் இருந்து தாம்​பரம், செங்​கல்​பட்டு வரை செல்​லும் ரயில்​கள் 6-வது நடைமேடை வழி​யாக​வும் இயக்​கப்​படும்.

வார நாட்​களில் (பிப்.9 முதல் 18 வரை) கடற்​கரை​யில் இருந்து தாம்​பரத்​துக்கு இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்​படும் புறநகர் ரயில்​கள் முழு​மை​யாக ரத்து செய்​யப்​படு​கின்​றன.

Read More

அதே​போல, கூடு​வாஞ்​சேரி​யில் இருந்து கடற்​கரைக்கு இரவு 9.05. 10.10, 11.15 மணிக்கு புறப்​படும் ரயில்​கள், தாம்​பரம் வரை மட்​டுமே செல்​லும். தாம்​பரம் – கடற்​கரை இடையே பகுதி ரத்து செய்​யப்​படு​கின்​றன.

ஞாயிற்​றுக்​கிழமை​களில் (பிப்​.8, 15) கடற்​கரை​யில் இருந்து தாம்​பரத்​துக்கு இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்​படும் ரயில்​களும், தாம்​பரத்​தில் இருந்து கடற்​கரைக்கு இரவு 10.00, 11.00, 11.40 மணிக்கு புறப்​படும் ரயில்​களும் ரத்து செய்​யப்​படு​கின்​றன. சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில்​ இத்​தகவல்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love