சென்னை: “நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏஐ காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏஐ காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி.
அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

More Stories
“சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி
ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம் – முதல்வர் விஜய் பதிவு
நவம்பர் மாதம் முதல் கோயம்பேடு-நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்