September 16, 2026

ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழாமாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்  தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்
அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க  மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்  தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல்  மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.

Spread the love