August 15, 2026

“ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்” – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ‘கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா. கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்.

நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம், சகோதரத்துவம், முற்போக்கு, மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம். அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love