March 20, 2026

ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பழி தீர்க்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

ஈரானில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை

ஈரானில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் மீதான முதல் தாக்குதலிலேயே (பிப். 28) அந்நாட்டு தலைமை மதகுருவான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து, நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் முக்கிய தலைவர்களும் பலியாகினர்.

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியும் (67) கொல்லப்பட்டார். ஈரானில் கமேனிக்கு அடுத்ததாக மிகவும் சக்திவாய்ந்த தலைவராக லாரிஜானி இருந்து வந்துள்ளார்.

லாரிஜானி கொல்லப்பட்டதையடுத்து, சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கு உரிய முறையில் பழி தீர்க்கப்படும். இந்தத் தியாகிகளைக் கொலை செய்ததற்காக கொலையாளிகள் விரைவில் அதற்கான விலை கொடுக்க நேரிடும் என்று ஈரானின் தற்போதைய தலைமை மதகுருவான மோஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று சௌதி அரேபியா எச்சரித்துள்ளது.

Spread the love