
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில், தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நீலகண்டா’. எல்.எஸ்.புரொடக் ஷன்ஸ் சார்பில், ஸ்ரீனிவாசுலு மற்றும் வேணு கோபால் தயாரித்துள்ள இப்படத்தை ராகேஷ் மாதவன் இயக்கியுள்ளார். ஸ்ரவன் ஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மார்க் பிரசாந்த் இசை அமைத்துள்ளார்.
இதில் யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்லு பிருத்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு, சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
“கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை மையமாக கொண்ட படம் இது. ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக நேற்று வெளியானது” என்றது படக்குழு.

More Stories
“100ஆவது படம் எடுக்க வேண்டும் என்ற அவரின் கனவு..” – கலங்கி பேசிய விக்ரமன் | R B Choudary | Vikraman
இன்று அஜித், ஷாலினியின் 26வது திருமணநாள்: எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க