April 23, 2026

“ஓட்டுரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்” – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சென்னை – ராணி மேரி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் சினிமா, அரசியல் என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை செலுத்தினார்.

ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி எண் 237-ல் தனது வாக்கினை ரஜினிகாந்த் செலுத்தினார். அதன் பின்னர் வாக்கு செலுத்தியதற்கு அடையாளமாக தனது விரலில் வைக்கப்பட்ட அடையாள மையை அவர் உயர்த்தி காட்டினார். தனது மகள் சவுந்தர்யா உடன் அவர் வாக்களிக்க வந்திருந்தார்.

“ஓட்டுரிமை உள்ள எல்லோரும் கண்டிப்பாக ஓட்டு போட வேண்டும்” என செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

Spread the love