October 14, 2026

கரப்பான் பூச்சிக்குப் பின் இப்போது ஈக்கள்: டெல்லி போராட்டங்களுக்கு நடுவே ‘மக்கி ஜனதா கட்சி’ வைரல்

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணையத்தில் கவனம் பெற்​றதைத் தொடர்ந்​து, ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்​ஜேபி) என்ற பெயரில் புதிய நையாண்டி இயக்​கம் சமூக வலை​தளங்​களில் பேசுபொருளாகி​யுள்​ளது. இதன் பெயர், ஈ ஈமோஜி, செய்​தி​கள் ஆகியவை வைரலான சிஜேபியை நினைவூட்டு​கின்​றன.

எம்​ஜேபி​யின் இன்​ஸ்​டாகி ராம் கணக்கு (@makkhijanta party) தன்னை ‘இளைஞர்​களின், இளைஞர்​களால், இளைஞர்​களுக்​காக’ உரு​வான அரசி​யல் முன்​னணி என அறி​முகப்​படுத்​துகிறது. தான் எந்த அரசி​யல் கட்​சிக்​கும் எதி​ரானதும் அல்ல, எந்​தக் கட்​சி​யுட​னும் இணைந்​ததும் அல்ல என்​றும் தெரிவிக்​கிறது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, அக்​டோபர் 10 அன்று டெல்​லி​யில் போராட்​டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்​திருந்​தது. இதற்கு ஜந்​தர் மந்​தரில் அனுமதி மறுக்​கப்​பட்​டது.

இதனால் பல மெட்ரோ நிலை​யங்​களுக்​குச் செல்​லத் தடை விதிக்கப்​பட்​டது. பொது​மக்​களின் பயணத்​துக்கு ஏற்​படும் பாதிப்பு​கள் குறித்து வழக்​கறிஞர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் முறையிட்​டனர். அக்​டோபர் 9 அன்​று, தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான மூன்று நீதிப​தி​கள் அமர்​வு, பாது​காப்பு நடவடிக்​கைகள் அளவுக்கு மீறக் கூடாது என்று கூறியது. “ஈயைக் கொல்ல சுத்​தி​யலைப் பயன்​படுத்த வேண்​டாம்” என்று உச்ச நீதிமன்​றம் கூறியது. இந்​தக் கருத்தே மக்கி ஜனதா கட்​சி​யின் பெயருக்​கும் நையாண்​டிக்​கும் அடிப்​படை​யானது.

எம்​ஜேபி தனது பதிவு​களில், “ஒரு நாள் கரப்​பான் பூச்​சி, மறு​நாள் ஈ… ஜனநாயகத்​தில் மக்​களை இப்​படியா அழைப்​பது?” என்று கேள்வி எழுப்​பு​கிறது. எம்​ஜேபி​யின் இணை​யதளம் முதலாளித்துவம், தொழில் ​முனை​வு, வேலை​வாய்ப்பு உருவாக்கம், திறன் வளர்ப்​பு, பொருளா​தார முன்​னேற்​றம் ஆகிய​வற்றை வலி​யுறுத்​துகிறது.

Spread the love