November 24, 2026

கருரில் திமுக செயற்குழு கூட்டம் 

கரூர்,நவ.22-

கரூர் மாவட்ட திமுக  செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட அலுவலகத்தில்  நடந்தது.

மாவட்ட  அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட  திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேசியதாவது, 

வரும் கரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை மிகப்பெரும் ஓட்டு  வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்தும், அதற்கு கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்துதிமுக இளைஞரணி செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்,  மாணவர்களுக்கு நோட்புக் வழங்குவது, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது.

தொடர்ந்து. வரும் 28,29ம் தேதிகளில் சிஎஸ்ஐ  விளையாட்டு மைதானத்தில் கபாடி போட்டியும், டிசம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில் அட்லஸ் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், அதேபோல் டிசம்பர் 12, 13-ஆம் தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்துவது,

மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதல்வர் பேசியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உயிர் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் அமைதி காப்பதற்கும் மற்றும்

பேரவை துணைத் தலைவர் பொறுப்பின் மாண்பை குலைத்தவர் மீதும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் செயல்பாட்டுக்கும் எந்தவிதமான சட்ட நடவடிக்கை எடுக்காததற்கும்,

தமிழ்நாட்டில்  தற்போது போதை கலாச்சாரம், காவல் நிலைய மரணங்கள்,  பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க தவறியதற்கும் தவெக அரசை வன்மையாக கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி இளங்கோ, குளித்தலை சந்திரன், மாநில நெசவாளர் அணி தலைவர் உட்பட  திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love