கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 12 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விஜய் தலைமையிலான தவெக அரசு பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கரூர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் செல்வ.நன்மாறன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநில மருத்துவர் பாசறை செயலாளர் மருத்துவர் கருப்பையா, மேற்கு மாவட்ட தலைவர் மைக்கேல், அரவக்குறிச்சி தொகுதி செயலாளர் மகேந்திரன், குளித்தலை தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன்,
மாநில மகளிர் பாசறைச் செயலாளர் கவிதா, வீரத்தமிழர் முன்னணி மாநில பொறுப்பாளர்கள் சேகர், முனியப்பன், பிரேம் குமார், பூபதி, கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அபூர்வா, கவியரசு, அஸ்ரத், நாகராஜ், மனோஜ் குமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.

More Stories
அணைப்பாளையம் மேம்பாலம் திறப்பு விழா
மூமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா
கட்டாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை