September 11, 2026

கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 5வது நாளாக பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் செப்12

தனியார் நிறுவனம் சார்பில் கரூர் மாநகராட்சி உட்பட்ட 48வார்டுகளில் குப்பைகளை தரம் பிரித்து பாலம்மாள்புரத்தில் உள்ள குப்பை கார்டில் சேர்த்து வருகின்றனர்.இந்த தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 410பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வரையறுத்துள்ள சம்பளத்தை முழவதும் வழங்கவேண்டும் வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் அரசு பணியாளராக மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம்தேதி முதல் ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை கருர் மாநகராட்சி முன்பு நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று 5நாளாக (11ம்தேதி)நீடிப்பதால் கரூர் நகரில் உள்ள வீடுகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. 

Spread the love